Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (08:04 IST)
இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் இன்று முக்கிய வங்கி பணிகளை முடித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது




வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளை அயலக சேவைக்கு விடுவதை அனுமதிக்க கூடாது ஆகியவை உட்ப பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பில் உள்ள ஒன்பது சங்கங்களில் பாஜகவின் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய இரண்டு சங்கங்கள் தவிர மீது அனைத்து சங்கங்களும் நாளை வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன

இந்த வேலைநிறுத்தத்தால் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவை வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்சிஸ், கோடக் மகிந்திரா ஆகிய தனியார் வங்கிகளில் காசோலைகளை மாற்றும் சேவையும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் முக்கிய வங்கிப்பணிகளை இன்றே முடித்து கொள்ள வங்கி அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments