Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கேரளாவில் பரபரப்பு’ - நாளை முழு அடைப்பு போராட்டம்!

Advertiesment
’கேரளாவில் பரபரப்பு’ - நாளை முழு அடைப்பு போராட்டம்!
, புதன், 12 அக்டோபர் 2016 (19:36 IST)
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற (32) வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 
 
அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொகுதியான பினராயி நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதே கன்னூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் மோகனன் (52 ) என்பவரை 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில் இன்றைய கொலை நடைபெற்றுள்ளதாக கேரள பா.ஜ.க., தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பா.ஜ.க., தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அந்த கட்சி அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2002 மே மாதம், ரெமித்தின் தந்தை சோடன் உத்தமன், கீழுர் அருகே படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசியது தமிழா? : ஆராய்ச்சியில் ஆச்சர்யம்