Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் 36 மணி நேரம் டிரம்ப்: முழு பயண விபரம்

இந்தியாவில் 36 மணி நேரம் டிரம்ப்: முழு பயண விபரம்
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (07:30 IST)
இந்தியாவில் 36 மணி நேரம் டிரம்ப்: முழு பயண விபரம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க அதிபரின் வருகை குறித்த முழு விவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்தியாவிற்கு வருகை தரும் டிரம்பை வரவேற்க இந்திய தலைவர்கள் மற்றும் இந்திய மக்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முழு பயண விவரம் இதுதான்:
 
பிப்ரவரி 24:
 
காலை, 11:40 மணிக்கு டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் விமான நிலையம் வருகை தருகிறார் பிரதமர் மோடி அவரை வரவேற்கிறார்.
 
பகல், 12:15 மணி: டிரம்ப், மோடி ஆகிய இருவரும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். 
 
1:05 மணி: அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போன்று குஜராத் அரசு சார்பில் உலகின் பெரிய ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடக்கிறது.
 
3:30 மணி: தாஜ்மஹாலை காண டிரம்ப் - மெலனியா, ஆக்ரா செல்கின்றனர்.
 
இரவு, 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஓட்டலில் தங்குகின்றனர்.
 
 
பிப்ரவரி 25:
 
காலை, 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
 
10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
 
11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத தடுப்பு உட்பட பல துறைகளில், இந்திய - அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை 
 
பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு
 
இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப்.
 
இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே விமானத்தில் முகஸ்டாலின்-ஓபிஎஸ் பயணம்: ரகசிய சந்திப்பா?