Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்!

Advertiesment
இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்!
, ஞாயிறு, 29 நவம்பர் 2020 (10:04 IST)
உலகம் முழுவதும் கடந்த ஏழு மாதங்களாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடந்த மார்ச் மாதம் முதல் ஆட்டிப்படைக்கின்றது. இந்த நிலையில் இந்தியாவில் மேலும் 41,810 பேருக்கு 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,92,920 என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 496 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,36,696 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 24 மணிநேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,298 என்பதும், இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 88,02,267 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் தற்போது மொத்தம் 4,53,956 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து பாடங்களையும் பாதியாக குறைக்க முடிவு! – பள்ளிக் கல்வித்துறை!