தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 6 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,297  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 7325  என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
	 
	மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,049 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 48,64,506 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 76,786 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது