Publish Date: Sun, 21 Aug 2022 (10:04 IST)
Updated Date: Sun, 21 Aug 2022 (10:06 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,43,39,429 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,27,332 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,37,12,218 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 99,879 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.