22 ஆயிரமாக பதிவான தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (09:51 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,28,28,425 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,11,230 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,20,37,536 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,53,739 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments