தமிழகம் செய்வது சட்ட விரோதமானது - பசவராஜ் பொம்மை காட்டம்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (08:41 IST)
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்ட விரோதமானது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து. 

 
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தது. 
 
இதனைத்தொடர்ந்து மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்ட விரோதமானது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்ட விரோதமானது. பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments