கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, தமிழர்கள்தான் கன்னடர்களை சீண்டுகின்றனர் என்று சர்ச்சையாக கூறியுள்ளார்.
பாஜக மத்திய மந்திரி சதானந்த கவுடா, கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து கூறியதாவது:-
கன்னடர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். நாங்கள் தான் தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம். தமிழர்கள்தான் கன்னடர்களை சீண்டுகின்றனர்.
தமிழகத்தில் கன்னடர்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால் அதன்பிறகும் கன்னடர்கள் பரந்த மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்.
இருந்தாலும் அனைவரும் அமைதியாக வேண்டும், என்று கூறியுள்ளார்.