Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் முதல் மே வரை அதிக வெப்பநிலை இருக்கும்: வானிலை மையம் கணிப்பு

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (07:47 IST)
மார்ச் முதல் மே வரை அதிக வெப்பநிலை இருக்கும்:
தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக இரவு நேரத்தில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 
 
இந்த ஆண்டு வெப்ப நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் வெப்பம் அதிகம் இருக்கும் என்று குறிப்பிட்டு கூறியுள்ளது 
 
உலகில் வெப்ப அலைகள் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக இந்தியாவும் மாறி வருவதாகவும் குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், டெல்லி, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில பகுதிகள் மற்றும் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வெப்ப அலை ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த கோடையை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments