Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்குத் தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திட்டவட்டம்!

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (08:17 IST)
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கு இடமில்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவக்குமார் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையும் பொய்த்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் கிருஷ்ணசாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் தண்ணீர் திறக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்

எந்த சூழலிலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது என்ற கேள்விக்கு இடமில்லை என்றும் இதுவரை   தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும் அளவுக்கு கர்நாடகா அரசில் இருக்கும் நாங்கள் முட்டாள் இல்லை என்று டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments