நவீன டெக்னாலஜி மூலம் திருப்பதி கோவில் பாதுகாப்பு.. திருமலை தேவஸ்தானம் தகவல்..!

Mahendran
சனி, 12 ஜூலை 2025 (10:50 IST)
திருப்பதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துகொண்டிருக்கும் நிலையில், திருப்பதி கோயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நவீனப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்  திட்டமிட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு குழு கூட்டத்தில், அலிபிரி சோதனை சாவடி நவீனமயமாக்கப்படும் என்றும், உயர் திறன் கொண்ட ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
 
மேலும், வாகனம் நிறுத்தும் இடம், அதிநவீன போக்குவரத்து கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு நெட்வொர்க் ஆகியவை இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து தொழில்நுட்பம் மூலம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். எல் அண்ட் டி நிறுவனம் தான் இந்த நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க இருப்பதாக கூறிய அதிகாரிகள், பக்தர்களின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் விஷயங்கள் அனைத்தும் கவனிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
மேலும், பல விஐபிகள் மற்றும் விவிஐபிக்களின் வருகையும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும், சாதாரண பக்தர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் விஐபிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர். பாதுகாப்பு மறுசீரமைப்பு, நுழைவு நடைமுறைகளை எளிதாக்குவது, நவீன டெக்னாலஜி மூலம் பாதுகாப்பை அதிகரிப்பது ஆகிய அம்சங்கள் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments