Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

Siva

, ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (10:47 IST)
திருப்பதியில் வழங்கப்பட்ட தயிர் சாத பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்திக்கு தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதி திருமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினசரி இலவசமாக உணவு வழங்கப்படும் நிலையில், தனக்கு வழங்கப்பட்ட தயிர் சாதத்தில் பூரான் இருந்ததாக பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி இலவச உணவு சாப்பிட்டு வரும் நிலையில், வேகவைத்த உணவில் உடல் பாகங்கள் சேதமடையாமல் முழு பூரான் சிதையாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்றும், பக்தர்கள் இதை நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தானம் கூறியுள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் லட்டுவில் கலந்த நெய்யில் விலங்குகள் கொழுப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தயிர் சாதத்தில் பூரான் இருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் உடனடியாக இதற்கு திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளதை அடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!