Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை யாரும் தடுக்க முடியாது: சபரிமலைக்கு செல்லவிருக்கும் பெண் பேட்டி

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (22:06 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில் திருப்தி தேசாய் என்ற பெண் 'நானும் என்னுடன் ஐந்து பெண்களும் வரும் 17ஆம் தேதி சபரிமலைக்கு செல்லவிருக்கின்றோம். எங்களை யாரும் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார்.

தான் சபரிமலைக்கு செல்லவிருப்பதை ஏற்கனவே முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிரதமர் மோடிக்க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், தாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளதாகவும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதால் வீம்புக்கு சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டாம் என்றும், உண்மையிலேயே பக்தியின் காரணமாக செல்வதாக இருந்தால் பெண்கள் தாராளமாக சபரிமலைக்கு செல்லலாம் என்றும் அவ்வாறு வீம்புக்கு செல்லும் பெண்களின் காலில் விழுந்து கோயிலின் விதிமுறைகளை மீற வேண்டாம் என்று அறிவுறுத்துவோம் என்றும் சபரிமலை கோவில் தந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments