திருப்பதி விஐபி கட்டண உயர்வு – தேவஸ்தான கமிட்டியின் மாஸ்டர் பிளான் !

சனி, 7 செப்டம்பர் 2019 (09:02 IST)
திருப்பதியில் விஐபி கட்டணத்தை 20,000 ரூபாயாக உயர்த்த திருப்பதி தேவஸ்தான் கமிட்டி முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை விஐபிகள் ரூ 500 கட்டணத்தில் எல்1, எல்2, எல்3 ஆகிய 3 பிரிவுகளில் அனுப்பப்பட்டு வந்தனர். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 

இதனால் இந்த 3 விதமான விஐபி கட்டண முறை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விஐபி டிக்கெட் விலையை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த டிக்கெட் வாங்குபவர்கள் ஏழுமலையானுக்கு மிக அருகில் அதாவது குலசேகர ஆழ்வார்படி வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மேலும் பல ஏழுமலையான் கோவில்களைக் கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு நிதி திரட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 2 – தொடர்பை இழந்தது இஸ்ரோ !