தன் சாதனையை தானே முறியடித்த திருப்பதி! – ஒரு நாள் உண்டியல் வசூல் இவ்வளவா?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (09:01 IST)
நேற்று வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூலில் சாதனை படைத்துள்ளது.

நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் திறப்பை காண முக்கியஸ்தர்கள் முதல் சாதாரண மக்கள் வரை லட்சக்கணக்கானோர் திருப்பதியில் குவிந்தனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை புதிய சாதனையை படைத்துள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் திருப்பதி உண்டியல் வசூல் ரூ.7.68 கோடி என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஒருநாளில் ரூ.6.31 கோடி காணிக்கை கிடைத்தது திருப்பதி கோவிலின் அதிகபட்ச ஒருநாள் உண்டியல் வசூல் சாதனையாக இருந்தது. நேற்றை காணிக்கை வசூல் மூலம் தனது சாதனையை தானே முறியடித்துள்ளது திருப்பது ஏழுமலையான் கோவில்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments