திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. இன்று ஆன்லைனில் டிக்கெட் விற்பனை..!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (10:27 IST)
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும். 
 
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வழிபட 300 ரூபாய் டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
 டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி நாள் வருவதை அடுத்து  டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் சொர்க்கவாசல் திறக்கும் நாட்களில் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட் இன்று முதல் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
ஆன்லைன் மூலம் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை  https://ttdevasthanams.ap.gov.in என்ற  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments