Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவுக்குத் தாவும் திருணாமூல் காங்கிரஸ் எம்.பி – தேர்தலுக்குப் பின்னும் மம்தாவுக்குப் பின்னடைவு !

பாஜகவுக்குத் தாவும் திருணாமூல் காங்கிரஸ் எம்.பி – தேர்தலுக்குப் பின்னும் மம்தாவுக்குப் பின்னடைவு !
, சனி, 25 மே 2019 (11:35 IST)
தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களுக்குள்ளாகவே திருணாமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பாஜகவுக்குத் தாவ இருப்பதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350  இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

இதில் மேற்குவங்கத்தில்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மொத்தம் 19 எம்பிக்கள் திருணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ளனர். ஆனாலும் அங்கே பாஜக வலுவாகக் காலூன்றியுள்ளது.

ஆனால் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பீஜ்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக பதவி வகித்து வருபவர் சுப்ரங்சூ ராய் பாஜகவுக்குத் தாவ இருப்பதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. அதை உண்மையாக்குவது போல கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி, சுப்ரங்சூ ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பென்ட் செய்ததுள்ளது.

இது சம்மந்தமாக கருத்து தெரிவித்துள்ள சுப்ரங்சூ ’இப்போது நாம் நிம்மதியாக மூச்சு விடுவேன். திருணாமூல் காங்கிரஸில் பலர் மூச்சுத்திணறலில் உள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பாஜகவுக்கு தாவுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெரீசா மே விலகல்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது