மத்திய பிரதேச மாநிலத்தில் தக்காளி திருட்டை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரிகள் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி திடுடப்படுவதாக சில தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து தக்காளி திருட்டை தடுக்க சில வியாபாரிகள் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.
மார்க்கெட்டில் தக்காளி திருடு போகாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுள்ளது. மேலும் சில வியாபாரிகள் தனியார் பாதுகாவலர்களை பாதுகாப்பு பணியில் நிறுத்தியுள்ளனர்.