ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்தவரின் வாக்கை பதிவு செய்த மூன்று தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தற்போது தபால் வாக்குகள் வீடுகளுக்கு சென்று பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பத்தினம் திட்டா என்ற பகுதியில் 85 வயது மூதாட்டியான அன்னம்மாள் என்பவரது வாக்கை தேர்தல் அதிகாரிகள் பதிவு செய்த நிலையில் அன்னம்மாள் என்பவர் ஆறு வருடத்திற்கு முன்பே இறந்து விட்டார் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அன்னம்மாள் என்பவரின் மருமகளும் அன்னம்மாள் என்ற பெயரை உடையவர் என்பதால் 85 வயது அன்னம்மாள் வாக்குக்கு பதிலாக மருமகள் அன்னம்மாள் வாக்கை பதிவு செய்து வந்து விட்டதாக தபால் தேர்தல் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து விசாரணை செய்த தேர்தல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூன்று தேர்தல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் சர்ச்சைக்கு உள்ளான வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.