Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 7 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கட்ட தேவை இல்லை!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (12:41 IST)
வருடம் ரூ. 7 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கட்ட தேவை இல்லை என இந்த ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
2023-2024ம்  நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை இருந்தால் வருமான வரி கட்ட தேவையில்லை இந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே இருந்த ரூ.5 லட்சம் வருமான வரி வரம்பு, தற்போது ரூ.7 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி 7 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
அதன் படி 5 லட்சம் முதல் 7.50 லட்சம் வரை 5 சதவிகிதமும், 7.50 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 சதவிகிதமும், 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 சதவிகிதமும், 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25 சதவிகிதமும், 15 சதவிகிதத்திற்கு மேல் 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments