Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேல் டயரில் எலுமிச்சை பழம் ஏன்? ராஜ்நாத் சிங் பதில்!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (15:46 IST)
பூஜை செய்தது தங்களுடைய நம்பிக்கை என்று, எலுமிச்சை பழம் விவகாரம் குறித்து ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார். 
 
இந்தியா – பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தப்படி 36 அதிநவீன ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்துக்காக பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜையன்று முதல் விமானத்தை வாங்கி வருவதற்காக பிரான்ஸ் சென்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். 
 
அன்று ஆயுத பூஜை என்பதால் ரஃபேல் விமானத்தை வாங்கிய கையோடு அதற்கு பூ, பொட்டு வைத்து, குங்குமத்தால் ஓம் என்று எழுதி, டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார். இது இணையத்தில் ட்ரெண்டானது. 
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தேசத்துக்கான ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட மதம் சார்ந்த பூஜைகள் நடத்துவது தவறு எனவும் இது குறித்து வாதிட்டன. இந்நிலையில் நாடு திரும்பியுள்ள ராஜ்நாத் சிங் இது குறித்து பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
எனக்கு சரி என்று பட்டதைதான் செய்தேன், எதிர்காலத்திலும் எனக்கு சரி என்று பட்டதைதான் செய்வேன். பூஜை செய்தது எங்களுடைய நம்பிக்கை, எல்லாவற்றிற்கும் மேலான சக்தி ஒன்று உண்டு. 
 
எனவே, யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. அவரவர் நம்பிக்கைப்படி வழிபடுவதற்கு உரிமை உள்ளது என்றும், இதேபோல வேறு யாரும் பூஜை செய்திருந்தாலும் நான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments