Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2023 தான் எனது கடைசி தேர்தல்: முன்னாள் முதல்வர் பேட்டி!

Advertiesment
2023 தான் எனது கடைசி தேர்தல்: முன்னாள் முதல்வர் பேட்டி!
, புதன், 13 அக்டோபர் 2021 (08:21 IST)
2023 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் தான் என்னுடைய கடைசி தேர்தல் என முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் குமாரசாமிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். ஆனால் அந்த ஆட்சி சில மாதங்களில் கவிழ்ந்து விட்டது
 
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அது தான் தனது கடைசி தேர்தல் என்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்
 
தான் இரண்டு முறை முதலமைச்சராக இருந்ததற்கு கடவுள் அருள் தான் காரணம் என்றும் ஆனால் தனக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று கூறிய குமாரசாமி 2023 இல் தனது அறுதிப் பெரும்பான்மை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் மக்கள் நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு ஓட்டு போட வேண்டாம் என பிரச்சாரம் செய்த வேட்பாளருக்கு 24 ஓட்டுக்கள்!