Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 ரூபாய கொடுத்து விவசாயிங்கள அசிங்கப்படுத்திட்டீங்களே மோடி: கொதிக்கும் ராகுல்

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (16:37 IST)
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் விவசாயிகளை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயிகளுக்கான நலத்திடங்கள் அறிவிக்கப்பட்டது 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 
 
பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு எனும் சிறப்புத் திட்டம். விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். 2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து டுவீட் போட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உங்களின் 5 ஆண்டுகால திறனற்ற ஆட்சியில் விவசாயிகள் படாதபாடு பட்டுள்ளனர். நீங்கள் வருடத்திற்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் 6000 (நாள் கணக்கில்: ஒரு நாளைக்கு 17 ருபாய் கணக்கு) விவசாயிகளை கொச்சைபடுத்துவது போல இருக்கிறது. இந்த 17 ரூபாயை பெறுவதற்காகவா அவர்கள் இவ்வளவு பாடுபட்டார்கள் என ராகுல் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments