Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 லட்சம் பக்தர்கள்.. ரூ.120 கோடி உண்டியல் காணிக்கை.. திருப்பதி கோவிலில் சாதனை..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:03 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாத பக்தர்கள் எண்ணிக்கை மற்றும் உண்டியல் காணிக்கை குறித்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 22.22 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் பக்தர்கள் காணிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூபாய் 120.05 கோடி உண்டியல் வசூலாகியுள்ளதாகவும் தெரிகிறது. 
 
9.07 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும்  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.59 கோடி லட்டுக்கள் விற்பனை ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

ஒரு கோடி உறுப்பினர்கள்.. இந்தியாவின் 5வது பெரிய கட்சியானது தவெக..!

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments