அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து திருடிய திருடர்கள் மீண்டும் மன்னிப்பு கடிதத்தோடு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை திருப்பி கொடுத்துள்ள சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 1710 தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் திடீரென திருடு போனது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தடுப்பூசி திருடு போனதால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தங்களது தவறை உணர்ந்த திருடர்கள் மீண்டும் திருடிய இடத்திலேயே கொரோனா தடுப்பூசி மருந்துகளை வைத்துவிட்டு தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது