இந்தியாவில் தேர்தல் வந்தால்…ராமருக்கு விக்கல் வந்துவிடும் – பாஜகவைக் கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ் !

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (15:17 IST)
இந்தியாவில் தேர்தல் வரும் போதெல்லாம் பாஜகவினருக்கு ராமர் நியாபகம் வந்துவிடும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலம் மஹாராஞ்சக் பகுதியில் நேற்று ஜனதா தளக் கூட்டணியின் ஆதரவாளர் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை கேலி செய்யும் விதமாக ஒருக் கதை சொல்லி மக்களை உற்சாகப்படுத்தினார்.

’கடவுள் ராமருக்கு ஒரு முறை விக்கல் வந்தது. அதைப் பார்த்த அவரது மனைவி சீதா பிரபு உங்களுக்கு என்ன ஆனது எனக் கேட்டார். அதற்கு ராமர் இந்தியாவில் தேர்தல் வந்திருக்கிறது போலும் பாஜகவினர் என்னை நினைக்க ஆரம்பித்துள்ளனர்.இதுதான் பாஜகவின் உண்மையான முகம். அவர்களுக்குத் தேர்தல் வந்தால்தான் ராமர், ராமர் கோயில், அயோத்தி எல்லாம் தெரியும். பாஜகவோடுக் கைகோர்த்தத்ன் மூலம் நிதிஷ் குமார் மண்ணோடு மண்ணாகிவிட்டார்’ எனக் கூறினார். இதனைக் கேட்ட மக்கள் உற்சாகமாக கைதட்டி அவரை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments