Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாற்காலியை மட்டுமே துரத்தும் குழப்பவாதி.! ராகுல் காந்தியை விளாசிய கங்கனா ரனாவத்.!!

Senthil Velan
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:58 IST)
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாற்காலியை மட்டுமே துரத்தி ஓடும் குழப்பவாதி என்று பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியுள்ளார். 
 
நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி குறித்து பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி ஒரு குழப்பவாதி என்றும்  எப்போதும் தனது பேச்சுகளிலும், நடத்தையிலும் ஒரு குழப்பமான நிலையிலேயே செயல்படுகிறார் என்றும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தி தனது இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கு இன்னும் தனது சொந்த பாதையை அவர் தேர்வு செய்யவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும் இந்திரா காந்தியை விட ராகுல் காந்தி மிகவும் வித்தியாசமான பாதையில் செயல்பட்டு வருகிறார் என்றும் தனக்கு யார் தலைவர் என்ற உறுதியான நிலைப்பாடு அவருக்கு இல்லை என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்
 
ராகுல் காந்தி  ஒரு நாற்காலியை மட்டுமே துரத்தி ஓடுகிறார் என்று அவர் விமர்சித்துள்ளார்.  ஒவ்வொரு முறையும் அவர் தனது பாதையை மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடத்தில் இதுவரை எந்த ஒரு ஆலோசனையும் கேட்டதில்லை என்றும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ: இணையவழி ஆபாச தாக்குதல்.! வந்திதா பாண்டே IPS-க்கு ஆதரவாக நின்ற கனிமொழி..!!
 
மக்களவை கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றி விமர்சனம் செய்ய, அவையில் சிவபெருமானின் புகைப்படத்தைப் பயன்படுத்தினார் ராகுல் காந்தி என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயம் அவரை போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நினைத்தேன் என்று  கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments