அரசுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் மாதம் ரூ.8 லட்சம்: முதல்வர் அறிவிப்பு..!

Mahendran
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:55 IST)
அரசின் சாதனைகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேசம் மாநில அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை சமூக வலைதளங்களான எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஃபாலோயர்களை பொறுத்து சம்பளம் வழங்கப்படும் என்றும் உத்தரபிரதேசம் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாலோயர்கள் அடிப்படையில் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் என சம்பளம் வழங்கப்படும்

அதேபோல் யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பதிவு செய்யலாம் என்றும், சப்ஸ்கிரைபர்கள் அடிப்படையில் ரூ.4 லட்சம் ரூ.6 லட்சம் ரூ.7 லட்சம் ரூ.8 லட்சம் என சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 உபி மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்
Show comments