Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட வந்த வீட்டில் ரூ.500 நோட்டை விட்டுச் சென்ற திருடன்

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (17:19 IST)
டெல்லியில்  திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காததால், திருடர்கள்  ரூ. 500  நோட்டை ஒன்றை விட்டுச் சென்ற சம்பவம்

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்குள்ள ரோகிணி நகர் பகுதியில்,   8 ஆம் பிரிவில் உள்ள ஒரு வீட்டில், ஓய்வுபெற்ற இன்ஜினியர் ஒருவர்  தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு  தன் குடும்பத்தினருடன் குருகிராமில் உள்ள மகன் வீட்டிற்குச் சென்றிருந்தார். பின்னர், 2 நாட்கள் கழித்து  தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடமிருந்து அருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளளது. அதில்,  அவர்து வீட்டை திறந்து திருடர்கள் பொருட்களை திருடியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே டெல்லியில் உள்ள தன் வீட்டிற்கு விரைந்துள்ளார்.  அப்போது வீட்டின் முன்பக்க நுழைவாயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

ஆனால், வீட்டில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்று அறிந்த பின்னர், இதுபற்றி போலீஸில் புகாரளித்தார். அப்புகாரின் தன் வாசலுக்கு அருகில் ரூ.500  நோட்டு இருந்தது என்று, வீட்டில் விலைமதிப்புள்ள பொருட்களும் இல்லை, எப்பொருளும் உடைக்கப்படவும் இல்லை என்று கூறியுள்ளார்.

திருட வந்தவர்கள் எப்பொருளும் கிடைக்காத விரக்தியில்தான்  ரூ.500 நோட்டை விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments