Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது'- மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (17:20 IST)
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 'ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே  உள்ளது' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து வருகிறது. இதைத் தடை செய்ய வேண்டுமென ஆளும்கட்சியும், எதிர்க்கட்சி, சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஆன்லைன் தடை மசோதா கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இந்த மசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில்,. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது.

அப்போது,   பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மீண்டும் ஆன்லைன் தலை மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு  கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா குறித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,. ’ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நான்கு மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல ; ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் ‘அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று திமுக எம்பி,, பார்த்திபன் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு,. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 'ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே  உள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும்,  மாநில அரசிற்கு அதிராமில்லை என்று கூறி தமிழக ஆளுனர் மசோதாவை திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தா?

யார் அந்த சார்? ஞானசேகரனுடன் பேசியது யார்? - போலீஸ் வெளியிட்ட விளக்கம்!

டீப் சீக்கை அடுத்து சீனா அறிமுகம் செய்துள்ள புதிய ஏஐ செயலி.. மோனிகா செய்யும் மாயாஜாலம்..!

ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவுடனும் ஒப்பந்தம்! இந்தியாவுக்குள் நுழைய ஸ்டார்லிங்க் தீவிரம்!

பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல்.. கடிதத்தை வெளியிட்ட தர்மேந்திர பிரதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments