மாநில எல்லைகளை மத்திய அரசு சீல் வைத்து விட்டது – முதல்வர் பழனிசாமி !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (00:23 IST)
கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்தோர் சொந்த ஊருக்கு வர முயற்சித்து கொண்டுள்ளனர். சமீபதித்தில் கூட உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் கால்நடையாக நடந்தேகூட சென்றனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவர்களுக்கு பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என பலரும் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது , மாநில எல்லைகளை மத்திய அரசு சீல் வைத்து விட்டது. எனவே அந்தந்த மாநிலத்தில் இருக்கிற தொழிலாளர்கள், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு தொழில் செய்ய போனவர்களுக்கு அங்கேயே தேவையான வசதிகளை அம்மாநிலமே செய்து கொடுக்கும். இதை மத்திய அரசும் தெளிவுப்படுத்தி விட்டது. #Corona #lockdown

மேலும், இறப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றிற்காக வெளியூர் செல்ல அனுமதி அளிக்கப்படும். யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளிக்கப்படும். மற்ற எதற்கும் கிடையாது. எல்லோரும் வெளியே செல்ல வேண்டுமெனில் அதற்கு 144 தடை உத்தரவு போடவேண்டிய அவசியமே இல்லை. #Lockdown21என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக நாடுகளை உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்! விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு!

இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடியை ஆட்டியது அதிமுகவினரா? - டீகோட் செய்த நெட்டிசன்கள்!

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments