கொசு வலை வழங்க வேண்டுமென்றும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மும்பை தொடர் குண்டிவெடிப்பு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது, இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களை செய்து வருவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள தாவூத் இப்ராஹிம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சமீபத்தில், தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என இந்தியய தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளி இஜஜாஸ் லக்டாவாலா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மிரட்டிப்பணம் பறித்த வழக்கில் மும்பை போலஸாரால் கைது செய்யப்பட்டு, மும்பை தாலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் விசாரணைக் கைதியாக இருப்பதல், இன்று இவ்வழக்கின் விசாரணைக்காக, மும்பை கோர்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர், தான் அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் கொசுக்குள் இருப்பதாக ஒரு பாட்டிலில் தான் அடித்து வைத்திருந்த கொசுக்கள் இருப்பதை ஆதாரமாகக் காட்டி,, தனக்கு கொசு வலை வழங்க வேண்டுமென்றும் தான் கொசு தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு போலீஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நீதிமன்றதிதில் கொசு வலை கேட்டு, லக்வாடா தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.