Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச படத்தால் வந்த விபரீத ஆசை! 9 வயது தங்கையை கெடுத்து கொன்ற சிறுவன்! - மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

Advertiesment
ஆபாச படத்தால் வந்த விபரீத ஆசை! 9 வயது தங்கையை கெடுத்து கொன்ற சிறுவன்! - மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

Prasanth Karthick

, ஞாயிறு, 28 ஜூலை 2024 (16:34 IST)

மத்திய பிரதேசத்தில் ஆபாச படங்களை பார்த்து தனது தங்கையையே வன்கொடுமை செய்து சிறுவன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் சிறுவர்களது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் தவழ தொடங்கிவிட்டது. இத்தகைய காலக்கட்டத்தில் ஆபாச படங்கள் ஆர்வத்தால் சிறுவர்கள், இளைஞர்கள் பலரது வாழ்க்கை மோசமான விளைவுகளை அடைகிறது. பல ஆபாச தளங்கள் அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் சில குறுக்கு வழிகள் மூலமாக அவ்வாறான தளங்களை பார்ப்பதும் அதிகமாக உள்ளது.

 

இந்நிலையில் ஆபாச படத்தால் மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் ஆபாச தளங்களில் வீடியோக்களை பார்த்து வந்துள்ளான். இதனால் தூண்டப்பட்ட சிறுவன் அதை தனது 9 வயது தங்கையிடமே செய்ததுதான் கொடூரத்தின் உச்சம். தனது அண்ணனே தன்னை வன்கொடுமை செய்த நிலையில் அதை தனது தந்தையிடம் கூறப்போவதாக அந்த சிறுமி கூறியுள்ளார்.
 

 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன், தனது தங்கையை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளான். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்துள்ளது. ஆனால் இந்த கொலை நடந்ததும் சிறுவனின் தாய், தந்தையர் இறந்த குழந்தையை புதைத்து மறைத்து சிறுவனை காப்பாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

 

நீண்ட நாட்களாக அந்த வீட்டில் சிறுமி காணப்படாதது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாருக்கு தகவல் வர அவர்கள் அழைத்து விசாரித்ததில் இந்த உண்மை தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மகனின் தவறை மறைத்து இத்தனை நாட்களாக மகனை காப்பாற்றிய தாய், தந்தை, 2 சகோதரிகள் என குடும்பத்தையே கூண்டோடு கைது செய்துள்ளனர் போலீஸ். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடரும் கைது படலம்.! மேலும் 3 பேர் கைது..!!