மும்பை நகரில் வெடிகுண்டு வைத்ததாக நள்ளிரவில் மிரட்டல் விடுத்த நபர்!

Sinoj
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (15:37 IST)
மும்பை நகரில் 6 முக்கிய  இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு ஒரு மெசேஜ் வந்தது.

அதில், மும்பை நகரில் 6 முக்கிய  இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்ற மிரட்டலுடன் தகவல் வந்ததாக மும்பை போலீஸார் கூறியுள்ளனர்.

இதையடுத்து, மும்பை மாநகர் முழுவதும் போலீஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களால ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மிரட்டல் பதிவிட்ட  நபரை கண்டுபிடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments