Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமானத்தில் கழிவறையில் இருந்தவாறே பயணம் செய்த பயணி!

Advertiesment
SpiceJet

Sinoj

, புதன், 17 ஜனவரி 2024 (14:11 IST)
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் கழிவறையில் இருந்தவாறே பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவின் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு குறைந்த செலவு விமான சேவை அளித்து வரும் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் ஆகும்.

இது 34 இந்திய நகரங்கள்,. 7 வெளிநாட்டு நகரங்கள் என 273 க்கும் அதிகமான விமானங்களை கொண்டு இயங்கும் இந்தியாவின் 4வது பெரிய விமான சேவை நிறுவனமாக உள்ளது.

இந்த நிலையில், மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்  பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி சிக்கிக் கொண்டதால் அவர் கழிவறையில் இருந்தவாறே 1 மணி நேரம் 50 நிமிடங்கள் பயணித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், முழு பணத்தையும் திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறதா பாஜக? பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லவில்லையே..!