Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காணாமல் போன 60 லட்சம் மரங்கள்.. தானாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு..!

Trees

Siva

, புதன், 10 ஜூலை 2024 (08:41 IST)
2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார்  60 லட்சம் மரங்கள் காணாமல் போன விவகாரத்தில் தானாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம்  வழக்கு பதிவு செய்துள்ளது.

2019 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்த சுமார் 60 லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம்  தெரிவித்துள்ளது.

60 லட்சம் மரங்கள் காணாமல் போன விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு மூன்று பேர் அமர்வில் விசாரணை செய்யப்படும் என்றும் இது தொடர்பாக மாநில அரசுகளின் வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகங்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மரம் காணாமல் போன விஷயத்தில் மிக கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளது உறுதியாகி உள்ளதை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!