Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு...!

Small onion

Senthil Velan

, சனி, 14 செப்டம்பர் 2024 (11:33 IST)
வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.   

வெங்காயம் ஏற்றுமதிக்கான வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி குறைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
 
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய குறைந்தபட்ச விலை ரூ.46,000ஆக இருந்தது. விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து செய்தது.
 
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக மத்திய அரசு முன்பு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த குறைந்தபட்ச விலையை ரத்து செய்தது உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 

 
வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரத்தில் விரைவில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவியை மது விருந்துக்கு அழைத்த கல்லூரி பேராசிரியர்கள்.! நெல்லையில் அதிர்ச்சி..!!