Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியையும், குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

Advertiesment
மனைவியையும், குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
, சனி, 22 ஜூன் 2019 (18:01 IST)
டெல்லியில் தனது மனைவியையும், குழந்தைகளையும் கணவனே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஆசிரியராக பணிபுரிபவர் உபேந்திர சுக்லா. இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். இவர்கூட இவரது தாயாரும் வசித்து வருகிறார்.

இன்று(சனிக்கிழமை) காலை உபேந்திரா அறை கதவை தட்டியிருக்கிறார் அவரது அம்மா. ஆனால் அதற்கு அவரிடமிருந்தோ, அவர் மனைவியிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. சந்தேகமடைந்த தாயார் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துள்ளார். அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது அங்கே உபேந்திராவின் மனைவியும், மூன்று மகன்களும் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் உபேந்திராவை கைது செய்துள்ளனர். போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த உபேந்திரா “நான்தான் என் மனைவியையும், குழந்தைகளையும் கொன்றேன். அவர்களை கொல்வதற்கு டைல்ஸ் கற்களை வெட்ட பயன்படுத்தும் அறுக்கும் எந்திரத்தை கொண்டு அவர்களது கழுத்தை அறுத்தேன்” என கூறியுள்ளார். ஆனால் என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்தார் என்பது குறித்து அவர் சொல்லவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி – சேலத்தில் பயங்கரம்