Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலத்தில் ஏர் உழுத விவசாயி அதிர்ஷ்டத்தால் லட்சாதிபதியானார்

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (14:29 IST)
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்தது என்ற பழமொழி போல் ஒரு நிகழ்வு நிஜமாகவே  நடந்துள்ளது நம் இந்தியாவில்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா மாவட்டத்திற்கு அருகே உள்ளது சரோகா கிராமம். இங்குதான் கேதர்நாத் ராய்கர் என்பவருக்குச் செந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நிலத்தில் உழவு செய்து வந்துள்ளார்  விவசாயி பிரகாஷ்குமார் சர்மா. அவர் நிலத்தை உழுது கொண்டிருக்கும் போது வைரக்கல் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது .

உடனே சர்மா இதுபற்றி மாவட்ட சுரங்கம் மற்றும் வைர அதிகாரி சந்தோஷ் சிங்கிடம் தகவல்  தெரிவித்தார்.

இந்நிலையில் விவசாய இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரி வைரக்கலைப் பெற்றுக் கொண்டார். பின்பு அவர் கூறியதாவது: ’இந்த வைரம் பொது ஏலத்தில் விடப்பட்டு அதன்மூலம் அரசாங்கத்திற்கு சேர வேண்டிய உரிமத்தொகை, வரிகள் கழித்தது போக மீதமிருக்கும் தொகையானது நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சர்மாவிடம் கொடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments