Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (16:01 IST)
அரியனாவில் தனியார் பள்ளி தலைமை அசிரியரை 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அரியனா மாநிலம் யமுனாகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 1500 அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரை, அந்த பள்ளியில் பயின்று வரும் 12-வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் தலைமை ஆசிரியர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இதையடுத்து விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாணவனை கைது செய்து, அவனிடம் எப்படி துப்பாக்கி வந்தது  குறித்தும் தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரால் தலைமை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வார இறுதி மட்டும் முகூர்த்த நாள்: சென்னையில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கும் சென்னை மக்கள்.. நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு.. தலைவர்கள் சுறுசுறுப்பு..!

டிடிஎப் வாசன் மீண்டும் கைது.. மதுரை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஆசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..! பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments