கொரோனா சிகிச்சை செய்த டாக்டரின் கை...நெகிழவைக்கும் வைரல் புகைபடம்!

செவ்வாய், 23 ஜூன் 2020 (18:37 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா தொற்றால் இதுவரை 90 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவுடன்போராட்டி மக்களைக் காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவகள், செவிலியர்கள்  பி.இ.இ போன்ற பாதுக்காப்பான உடைகளையே அணிந்து, மாஸ்க்,கிளவுஸ் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த உடைகளை அணிந்தால் வியர்த்துக் கொட்டும் இயற்கை உபாதைகளைக் கழிப்பது சிரமம்.

இந்நிலையில் சுமார் 10 மணிநேரம் பி.இ.இ ஆடையை அணிந்து 10 மணிநேரம் பணியாற்றிய மருத்துவர் ஒரிவரின் கையை புகைப்படம் எடுத்து  ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதைப்பார்ப்போரின் நெஞ்சை நெகிழ வைப்பது போல் உள்ளது அப்புகைப்படம். மருத்துவரின் கைகள்  தண்ணீரில் ஊறியது போல் உள்ளது. அதனால் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வரும் மருத்துவர்களுகு அனைவரும் பாராட்டுகளையும், கண்ணீருடன் அவருக்கு வணங்கள்  தெரிவித்துள்ளனர்.

This is the hand of a doctor after removing his medical precautionary suit and gloves after 10 hours of duty.
Salute to the frontline heroes.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 2 வணிகர்கள் மரணம் … , பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!