Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

Groom stabbed

Prasanth Karthick

, திங்கள், 20 மே 2024 (12:43 IST)
ராஜஸ்தானில் தான் காதலித்த பெண் வேறு ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் அந்த மாப்பிள்ளையை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா பகுதியை சேர்ந்த இளம்பெண் க்ரிஷன். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஷங்கர் லால் பார்தி என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாகவும் மாறியுள்ளது. சில ஆண்டுகள் நீடித்த அந்த காதல் இறுதியில் முறிந்துள்ளது.

இந்நிலையில் க்ரிஷனுக்கு அவரது பெற்றோர் மகேந்திரா சென் என்ற இளைஞரை திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். க்ரிஷனுக்கும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்களது திருமணம் சமீபத்தில் பில்வாராவில் நடைபெற்றுள்ளது. அப்போது மணமக்களுக்கு பலரும் கிஃப்ட் பொருட்களை தந்து வாழ்த்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த க்ரிஷனின் முன்னாள் காதலன் சங்கர் லால், கிஃப்ட் கொடுப்பது போல சென்று திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணமகன் மகேந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளார்.


அவரை பிடிக்க அங்குள்ளவர்கள் முயன்றபோது ஷங்கர் லால் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மணமகன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தலைமறைவான சங்கர் லாலை தேடி வருகின்றனர். மணமகனை சங்கர் லால் கத்தியால் குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!