கண்ணாம்பூச்சி விளையாடிய காதலன் உயிரிழப்பு.. காதலி கைது

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:12 IST)
சூட்கேஸில் ஒளிந்து விளையாடிய காதலன் இறந்த சம்பவத்தில்  காதலி கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சாரா. இவர் வின்டர் பூங்கா என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

இவர், ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாராவின் வீட்டில் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன்பின்னர், இருவரும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஜார்ஜ் ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள் ஒளிந்துள்ளார்.

அவர் தானே வெளிவந்து விடுவார் என நினைத்து சாராவும் தூங்கிவிட்டார்.

பின்னர், காலையில் எழுந்து தன் காதலரை வீட்டில் தேடியுள்ளார். ஆனால், அவரைக் காணவில்லை. பிறகுதான் அவருக்கு  ஜார்ஜ சூட்கேஸில் ஒளிந்தது ஞாபகம் வந்தது.

உடனே அதைத் திறந்து பார்த்தபோது, அதில், மூச்செடுக்க முடியாமல் இறந்துவிட்டார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாராவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments