Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் அட்டம்(CAA) அமலுக்கு வந்தது!

Advertiesment
central government

Sinoj

, திங்கள், 11 மார்ச் 2024 (19:06 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. விரைவில் மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று நாடு முழுவதும்  குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அண்டை நாடுகளில் சிறுபாண்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்கும்  2019 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது.
 
இது நாடு முழுவதும் அமலுக்கு வரும் என அறிவித்திருந்த நிலையில் , அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் இந்தியாவுக்கு வருகை புரிந்து  ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று திருத்தம் செய்திருந்தது.
 
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. குறிப்பாக மேற்கு வங்க முதல்வரும், தமிழ் நாடு முதல்வரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறியிருந்தனர்.
 
இந்த  நிலையில், இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என மத்திய பாஜக அரசு அறிவித்தபடி, சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று  நள்ளிரவு முதல் சிஏஏ அமலுக்கு வரலாம் என தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், ''மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்காளில் சிஏஏ, என்.ஆர்.சி ஆகியவை தீவிரமான விவகாரம் என்பதால் தேர்தலுக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு சீர்குலைய நாங்கள் விரும்பவில்லை'' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்..!