Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (22:15 IST)
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை ஏற்கனவே மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பணத்தைத் திரும்பப் பெறாதவர்களுக்கு 2 நாட்களில் பணம் திரும்ப செலுத்தப்படும்  என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாவது

''சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவில் ஸ்டேடிக் க்யூஆர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறும் சேவையில் 31.03.2024 அன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 01.04.2024 அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தடை ஏற்பட்டது. மெட்ரோ பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தி, QR பயணச்சீட்டைப் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை ஏற்கனவே மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பணத்தைத் திரும்பப் பெறாதவர்களுக்கு 2 நாட்களில் பணம் திரும்ப செலுத்தப்படும்.
 
​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருந்துகிறது ''என்று தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments