’பாஜக அரசு ’ மக்களிடம் இருந்து எதையோ மறைக்கப் பார்கிறது - ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (17:57 IST)
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டில் முதன் முதலாக முழுநேரம் மத்திய  நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமையான ஒன்று. இந்நிலையில் இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது குறித்து அனைவரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் தாக்கல் குறித்து காங்கிரஸ் முன்னால் மத்திய அமைச்சர் கூறியுள்ளதாவது :
 
மக்களிடம் எதையோ மறைக்கப்பார்க்கிறது மத்திய பாஜக அரசு. வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்கிறார்கள் இதென்ன நகைச்சுவை ? புள்ளிவிவரங்களின் எந்த வெளிப்படைத்தன்மையையும் இந்த பட்ஜெட் கடைபிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.
 
மேலும் இன்று சூட்கேசுக்குப் பதில் சிவப்புத்துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட் கொண்டு வந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதி அமைச்சர்கள் சி - பேடில் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

நடிகர் உபேந்திரா மனைவி செல்போன் ஹேக்.. லட்சக்கணக்கில் சைபர் குற்றமா?

மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் உல்லாசம்.. காதல் ஜோடியின் அநாகரீக செயல்..!

திருமண மேடையில் மணமகனுக்கு கத்திக்குத்து: குற்றவாளியை 2 கிமீ துரத்திய ட்ரான் கேமரா!

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மை தான்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments