Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை - தம்பித்துரை அதிரடி

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை - தம்பித்துரை அதிரடி
, புதன், 20 மார்ச் 2019 (13:53 IST)
கரூர் தற்போதைய எம்.பியும், அ.தி.மு.க கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை, இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 
நேற்று இரவு அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை சந்தித்த தம்பித்துரை இன்று கூட்டணி கட்சிகளான பா.ஜ.க, பா.ம.க, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். 
 
அப்போதுச் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை, திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரஸ் கட்சியும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளனர். இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கூட்டணி தான் இந்த தி.மு.க காங்கிரஸ் கூட்டணி, இவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும், நாளை செயல்வீரர்கள் கூட்டம் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அளவில் நடக்கின்றது. 
 
திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரஸ் கட்சி கூட்டணியையும், கட்சியையும், முறியடிக்க வேண்டுமென்பது தான் அ.தி.மு.க வின் நிலைப்பாடு, ஆகவே காங்கிரஸ் பிரமுகர்களே கூறியிருக்கின்றார்கள். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற முடியாது, மத்தியிலும் ஆட்சி இல்லை, மாநிலத்திலும் ஆட்சி இல்லை, அப்படி இருக்க கரூரில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஜெயித்தால் கரூர் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்றதோடு, காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போடுவதினால் பொதுமக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்றார். 
 
பேட்டியின் போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழல் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? - ஸ்டாலின் கேள்வி