உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காத்கோடன் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் இருந்து 10 அடி நீளம் கொண்ட ஒரு ராஜநாகம் நகர்ந்து சென்ற சம்பவம் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள வனத்துறை அலுவலரான டாக்டர் பி.எம். டாக்கதே என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், அம்மாநிலத்தில் உள்ள காத்கோடன் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் படிக்கட்டு அருகில் இருந்து, சுமார் 10 அடி நீளம் கொண்ட ராஜநாகம் நகர்ந்து செல்லும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது : பயணிகளூக்கும், பாம்புக்கும் எந்த தொந்தரவுமில்லாமல் பத்திரமாக உள்ளனர். சரியான நேரத்துக்கு ரயில் கிளம்பியது. ராஜநாகமும் காட்டில் விடப்பட்டது என பதிவிட்டுள்ளார்.