இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் சுதந்திர தின விழா நடைபெற உள்ள நிலையில் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஆகஸ்டு 5 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. அதேசமயம் காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக மாற்றி ஆகஸ்டு 5 உடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.
இதனால் அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்த பயங்கரவாதிகள் காஷ்மீர் மற்றும் நேபாளம் வழியாக உள்ளே நுழைந்துள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை அதிகரிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.